தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூா், பிப்.2. தஞ்சாவூர் மாநக ராட்சி ராஜராஜன் கலையரங்கம் தற்போது ஸ்ரீபதி திரையரங்கம் என செயல்பட்டு வருகிறது. இங்கு மாய பிம்பம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஆதரவுடன் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

படத்தின் இயக்குனர் கே .ஜே .சுரேந்தர் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
மாய பிம்பம் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளது. காமெடி, குடும்ப சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் பாராட்டுக்குரியதாக வருவதால் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து மகிழ்கின்றனர். ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் .இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் வந்து பாருங்கள். ஓடிடி-க்காக வெயிட் பண்ணாமல் தியேட்டர்ல வந்து பார்க்க வேண்டும் .


இது முழுக்க முழுக்க லவ் பேஸ்டு பிலிம்தான். பேமிலி, நல்ல பிரெண்ட்ஷிப், பேமிலி செண்டிமெண்ட், அதோட அழுத்தமான லவ் தான் கன்டென்ட். தற்போது இருக்கிற காலகட்டத்தில் காதல் என்பது மிக வேகமாக காதலித்து பிரியும் சூழ்நிலைதான் உள்ளது. பாஸ்ட் புட் டைம் ஆயிடுச்சு. மொபைல் போன் பெரிதாக வராத காலகட்டத்தில் காதல் என்பது அழுத்தமான இரு மனங்கள் இணைந்த விஷயமாக இருந்தது. எனக்கு ஒரு அழுத்தமான காதலை சொல்ல வேண்டும் என்பதால் 2005-ம் காலகட்டத்தை தேர்வு செய்தேன்.


நான் பி.எஸ்சி அக்ரி படித்து இருந்தாலும் சிறு வயதிலிருந்து சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய விருப்பமாக இருந்து வந்தது. கனவாக இருந்தது தற்போது நனவாக மாறியுள்ளது. அதை நோக்கி நான் பயணம் செய்தேன். அசிஸ்டென்ட் டைரக்டரா, அசோசியேட்டா ஏராளமான படத்தில் பணி புரிந்துவிட்டு தற்போது மாய பிம்பம் படத்தை இயக்கியுள்ளேன். என்னோட சொந்த ஊர் கடலூர். படத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் தான் கதைக்களமா பயன்பட்டிருக்கு என கூறினார்.
முன்னதாக படத்தின் இயக்குனர் சுரேந்தருக்கு திரையரங்கம் நிறுவனத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *