கோவையில் நடைபெற்ற பொற்சபை நாட்டியப்பள்ளியின் ஆண்டு விழா பொற்சிலம்பொலி எனும் தலைப்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது..
பொற்சபை நாட்டியப் பள்ளியின் 11 வது ஆண்டு விழா சிட்ரா கலையரங்கத்தில் மிகச் சிறப்பான முறையில், நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோட்டா கோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் கோட்டா மற்றும் கவிதா செந்தில் கோட்டா , கெளரவ விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கார்த்திக் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆச்சார்ய கலா நிபுணா. குரு நந்தினி செல்வராஜ் வழிநடத்தும் பொற்சபை நாட்டிய பள்ளியின் மாணவச் செல்வங்கள் தங்கள் திறமையை சிறப்புடன் வெளிப்படுத்தினர்.
இவ்விழாவின் சிறப்பு அம்சங்களாக வாய்ப்பாட்டு , வீணை, மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அறங்கேறின. வாய்ப்பாட்டு குரு முரளி கிருஷ்ணன் மற்றும் வீணை குரு. திருமதி மாலதி ஆகியோர் இணைந்து இசை நிகழ்சியை திறம்பட வழங்கினர்.
நடன நிகழ்ச்சியின் ஒவ்வொரு அங்கமும் விருந்தினர் கண்களுக்கு அற்புத படைப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான தசாவதாரம், வர்ணம் மற்றும் ஃபூசன் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
மேலும் கோயம்புத்தூர் – மான்செஸ்டர் சுழற்சங்கம் சார்பில் – குரு திருமதி நந்தினி செல்வராஜ் அவர்களுக்கு பாரதநாட்ய கலையின் அழகை மேன்மைப்படுத்தி வருவதற்கான தொழில்சார் சிறப்பு விருது சுழற்சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் அவர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மூத்த மாணவர் சம்யுக்தாவும் , வெளிநாடுகளில் இருந்து நடனம் பயிலும் மற்றும் பல மாணவிகளும் தங்கள் அனுபவ உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்
பொற்சிலம்பொலி 2024 அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. மாணவிகளின் கலைப் பயணம், அர்ப்பணிப்பு மற்றும் வளர்ச்சி ஒவ்வொரு நிமிடத்திலும் பிரகாசித்தது.