வேப்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட கவுன்சிலர் நிவாரண உதவி வழங்கினார்
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக மாவட்ட கவுன்சிலர் நிவாரண உதவிகள் வழங்கினார்
தமிழகத்தில் கடந்த மாதம் பெஞ்சல் புயலால் மழை பெய்தது அதனை தொடர்ந்து பருவ மழையும் அவ்வப்போது பெய்து வரும் நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வேப்பூர் கிராமத்தில் சுமார் 20 கூரை வீடுகள் இடிந்து விழுந்தது இதனால் அக்குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய பகுதி மாவட்ட கவுன்சிலர் நகர் சக்திவினாயகம் அரிசி காய்கறி மளிகை பொருட்களை வழங்கினார்
அப்போது வேப்பூர் கிராமத்தின் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சோலைராஜன், விசிக இளம் சிறுத்தை ஒன்றிய அமைப்பாளர் அர்ஜுனன் விசிக ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பரம.சங்கீதா ராஜபான்டியன் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்