திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக கழக அலுவலகத்தில், திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் 103- வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில், வலங்கைமான் நகர திமுக அவைத்தலைவர் சோம.மாணிக்கவாசகம், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.