ராஜபாளையம்
எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சீனிவாச ராமானுஜன் தின விழா கொண்டாடப்பட்டது.ராமானுஜன் அவர்களின் ஆழமான கண்டுபிடிப்புகள் மற்றும் கணிதத்திற்கான பங்களிப்புகளை நினைவு கூறுகிறோம்.இவ்விழாவின் மூலம் இளம் தலைமுறையினர் கணிதத்தின் மேல் ஆர்வம் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு கணித துறை சார்பில் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கணித துறை தலைவி மீனாட்சி அவர்கள் கணிதத்தில் ராமானுஜன் பங்களிப்புகள் பற்றி பேசினார்.உதவி பேராசிரியர் முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் ஜமுனா மற்றும் கல்வி ஆலோசகர் சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினர்.மாணவி சுபாஷினி நன்றியுரை கூறினார்.
