பிரபு. தாராபுரம்
செய்தியாளர்
செல்:9715328420
தமிழ் புலிகள் கட்சியினர் உள்துறை அமைச்சர் அமைச்சவை பதவி விலக கோரி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் பழைய நகராட்சி எதிரில் அமிர்ஷாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்ய முயன்றனர்.
அப்போது தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர்கள் ஒண்டிவீரன் அமிர்தாவின் உருவ பொம்மையில் பெட்ரோல் ஊற்றி பெரிய கடைவீதியில் இருந்து பழைய நகராட்சி அலுவலகம் நோக்கி ஓடி வந்தார்.
இதனை பார்த்த போலீசார் அவரைப் பிடித்து இழுத்து அவர் கொண்டு வந்த அமித்ஷாவின் உருவ பொம்மையை பிடுங்கிக் கொண்டு பைக்கில் ஏறி போலீசார் கிளம்பிச் சென்றனர். அதன் பிறகு தமிழ் புலிகள் கட்சியினர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதன் பிறகு போலீசார் தமிழ் புலி கட்சியினரை அங்கிருந்து கலைத்து விட்டனர். இதனால் பழைய நகராட்சி அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.