நாகர்கோவில் : தேங்காய்பட்டணம் துறைமுகக் கடற்கரையில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத் தில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக தேங்காய்பட்டணம் துறைமுகக் கடலோரப் பகுதியில் மாபெரும் தூய்மைப் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் திருமதி. லிபின் மேரி, ஊரக வளர்ச்சித்துறை உதவிப் பொறியாளர் திரு. C. ரெஜன், கடலோர காவல் குழும ஆய்வாளர் திரு. ரா. ததேயுங்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பரவை சாரிட்டபிள் டிரஸ்ட் கணக்காளர் Dr. M. ஐசக், பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் திருமதி. N. விஜயராணி, தக்கலை அரசுப்பள்ளி மாணவர் V.G. அடிட்டிக் ஷில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் திரு. M. இராஜகோபால் தலைமையில், செயலாளர் திரு. G. ஹான்ஸ்டன் ஜிக்சிங், பொருளாளர் திரு. T. ஷாஜன் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு கடற்கரைப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

கடலோரப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்வின் இறுதியில், சிறப்பாகப் பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கடல் வளத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் காக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தத் தூய்மைப் பணி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *