குரு சரண்யா சாய் பிரஷாந்த் , ஸ்ரீமதி கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமனின் முதன்மை சீடர்களில் ஒருவரான இவர் பரதநாட்டியக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஊடக ஆளுமையாக புகழ்பெற்றவர் ஆவார்.

இவர் இளம் வயதிலேயே நாட்டிய திலகம், நாட்டிய கலை சிகரம், நாட்டிய மயூரி, ஆடல் கலை அரசி, சாதிர் மாமணி, நாட்டிய தரகை உள்ளிட்ட பல பட்டங்களும், பல்லாண்டு கலைச் சேவைக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

1995 ஆம் ஆண்டில், சென்னையில் “சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா” என்ற நாட்டிய பள்ளியைத் தொடங்கி, பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் வீணை பயிற்சிகளை வழங்கி வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக, உலகளாவிய அளவில் பல்லாயிரக்கணக்கான நடன வல்லுனர்களை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில், ரோட்டரி கிளப் சென்னை வழங்கிய சிறந்த பெண் சாதனையாளர் விருது பெற்றதுடன், சித்தர்கள் ஆயிரம் – “திருக்குறள்” நிகழ்ச்சியின் மூலம் உலகளாவிய மாணவர்களுக்கு திருக்குறளின் பெருமையை அறிமுகப்படுத்தும் முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.

CSR நடவடிக்கையாக, அவரது நடன பள்ளி சார்பில் 2.65 லட்சம் ரூபாயை அடையாறு Cancer Institute-க்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அவரது மாணவர்கள் இதுவரை 4000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். இதில் உலக தமிழ் மாநாடு கம்போடியா உள்ளிட்ட பல முக்கிய மேடைகளில் இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், நேபாளம், கானா, ஆஸ்திரேலியா, மலேஷியா போன்ற நாடுகளில் பரதநாட்டியக் கலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுரை தமிழ் சங்கம், கரூர் தமிழ் சங்கம், பொள்ளாச்சி தமிழ் இசை சங்கம், டெல்லி தமிழ் இசை சங்கம் ஆகியவற்றுடன்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பத்மநாபன் கோயில் (திருவனந்தபுரம்), ராஜராஜேஸ்வரி கோயில், வடிவுடையம்மன் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மூகாம்பிகை கோயில், தஞ்சாவூர் பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருமலை திருப்பதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், ஷீர்டி சாய் பாபா கோயில் ஆகிய பல புனிதத் தலங்களிலும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சிறுவாபுரி கோயில், ஆதி காமாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில் ஆகிய தலங்களிலும், அவரது மாணவர்கள் பரதநாட்டியக் கலை மரபை ஆன்மீக பக்தியுடன் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், மார்கழி உற்சவம், நவராத்திரி சீரிஸ் (கபாலீஸ்வரர் கோயில், காளிகாம்பாள் கோயில்), குற்றாலீஸ்வரர் கோயில் (குற்றாலம்), குருவாயூர் அப்பன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், குலசேகரப்பட்டினம் தசரா விழா,
ஏலகிரி கோடை விழா, ஊட்டி மலர் கண்காட்சி விழா, ஜவ்வாது மலை விழா, மகாபலிபுரம் இன்டர்நேஷனல் பெஸ்டிவல், ராஜபவன் ஆளுனார் விழா மற்றும் மூன்று முறை கின்னஸ் உலக சாதனை, லிம்கா புத்தக சாதனை, யூனிக் புத்தக சாதனை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளனர்.

இவ்வாறு, நடனம் மற்றும் இசை கற்றுத்தருவதிலும், பாரம்பரியக் கலை மரபை உலகளாவிய அளவில் பரப்புவதிலும், குரு சரண்யா சாய் பிரஷாந்த் அவர்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.
சமீபத்தில், பழமை வாய்ந்த காஞ்சிபுரம் ஆதி காமாட்சி , ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் ஆலயத்தில் , நாட்டிய நடன விழாவை காஞ்சிபுரம் , சிறுவாக்கம் , ஸ்கந்தாலயா ஆலய நிறுவனர், பாம்பன் அருட்சித்தர் தவத்திரு , சஞ்சீவி ராஜா சுவாமிகள் துவக்கி வைத்த இந்நிகழ்வில்
இவரது குழுவினர் பங்கேற்ற இளஞ்சிறுமிகளின் பரதநாட்டிய நடனம் பலவிதங்களில் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடியதை கண்டு ரசித்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *