திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரண்டு குற்றவியல் நீதிமன்றம் ஒரு உரிமையியல் நீதிமன்றம் ஒரு சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகிறது.

இதில் சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் முற்றிலும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அரசு கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அங்கு வழக்கறிஞர்களுக்கான கழிவறை ஓய்வரை போன்ற அடிப்படை வசதிகளை கூட இல்லாமல் உள்ளது.

மேலும் இந்த நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் வழக்கறிஞர்கள் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பொதுமக்களும் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கு தொடுத்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு உரிய இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று மதுக்கூர் சாலையில் இடம் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டு விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும் தமிழக அரசு இதுவரை புதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை மத்திய அரசு நீதிமன்றத்திற்கு என அனுப்பும் கோடிக்கணக்கான ரூபாய்கள் பயன்படுத்தப்படாமல் திரும்பி செல்லும் நிலையில் ஏன் மன்னார்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் என்று மன்னார்குடி சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள்.

இதற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது தமிழக அரசு ரூ14 கோடியை நிதி ஒதுக்கீடு செய்து நீதிமன்ற கட்டிடத்தை உடனடியாக கட்டி தரவேண்டும் என அதிமுகசார்பாக வலியுறுத்துகிறேன் அப்படி கட்ட தவறும் பட்சத்தில் அதிமுக அரசு ஆட்சி அமைந்த உடன் முதல் நடவடிக்கையாக புதிய கட்டிடம் கட்டி தரப்படும் என்றார் .

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சிவ.ராஜமாணிக்கம் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை நிர்வாகிகள் சேவை அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு பேசினார்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *