அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும்,மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் 37- ஆம் ஆண்டின் நினைவு தின அனுசரிப்பு நிகழ்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் அஇஅதிமுக சார்பில் நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்விற்கு பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்ன பிரகாஷ்,கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு,மாவட்ட துணைச் செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர அவைத்தலைவர் கோம்பையன்,மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சலீம்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் துரைப்பாண்டி,மாவட்ட பிரதிநிதி சுரேஷ்,நகர எம் ஜி ஆர் மன்ற செயலாளர் கணேசன் உள்ளிட்ட மாநில,மாவட்ட,நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு மரியாதை செய்தனர் .