திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் கடந்த அதிமுக ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தலின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கியது.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தடை போட்டது. அதனைக் கண்டித்து நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றவுடன் விசாரணைக்கு வந்தது அதில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய எந்த தடையும் இல்லை 10.5% என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்தும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாமக முன்னால் மாவட்ட துணை செயலாளர் எம். எம். சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வலங்கைமான் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் அப்பு (எ) க.ரத்தீஷ் பாபு வரவேற்புரையாற்றினார். பாமக மாநில செயற்குழு உறுப்பினர் வலங்கைமான் என்.மாரிமுத்து, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கே. எஸ். பி. உலகநாதன், மாவட்டத் தலைவர் எம். கஐபதி ராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வலங்கைமான் சத்யா, பி. எஸ். பழனி, துணை செயலாளர்கள் கணேச. சண்முகம், ஜி. சத்தியமூர்த்தி, உழவர் பேரியக்க வலங்கைமான் ஒன்றிய செயலாளர், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் க. குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் வேணு. பாஸ்கரன் திமுக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் வலங்கைமான் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர், வலங்கைமான் தாசில்தார் ஆகியோரிடம் மனுவை நேரடியாக கொடுத்தனர்.