தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் பேரூர் கழகங்கள் சார்பில் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 57 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கும் உருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் திமுகவினரால் நடத்தப்பட்டன
தாராபுரம் நகர திமுக சார்பில் அதன் அவைத்தலைவர் கதிரவன் தலைமையில் தாராபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ்,கிழக்கு ஒன்றிய செயலாளர் குளத்துப்பாளையம் பேரூர் கழகச் செயலாளருமான கே கே துரைசாமி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் திமுக இளைஞரணி மாணவரணி உள்ளிட்ட சார்பு அமைப்பினர் மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்