மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பினர் துணிப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி புத்தூர் பகுதியில் துணிப் பை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.


மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலர் பேராசிரியர் கி.சதீஷ்குமார், துணைச் செயலாளர் ஆர்.கே. ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா உள்ளிட்டோரிடம் துணிப்பை வழங்கி புத்தூர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.


தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் துணிப்பை வழங்கி பேசுகையில்,
துணிப்பைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நீடித்து உழைக்கக்கூடியது, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது. துணிப்பை மக்கும் தன்மை கொண்டதால் பிளாஸ்டிக் கழிவுகளை வெகுவாகக் குறைக்கிறது. இவை உறுதியானவை, எடை குறைந்தவை மற்றும் சுகாதாரமானவை ஆகும். இதனால் நிலம் மற்றும் நீர் மாசுபாடு தவிர்க்கப்படுகிறது.

பலமுறை துவைத்துப் பயன்படுத்தலாம், இது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்துகிறது.பிளாஸ்டிக்கை பையை விட அதிக எடையைத் தாங்கக்கூடியது மற்றும் நீண்ட காலம் கிழிந்து போகாமல் உழைக்கும்.
துணிப்பைகளை எளிதாகத் துவைக்க முடியும், இதனால் கிருமித் தொற்று அபாயம் குறைவு.


துணிப்பை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பு மற்றும் விற்பனை மூலம் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் போன்றோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” சுற்றுச்சூழலையும்,பூமியையும் பாதுகாப்போம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *