தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அறிவியல் தமிழ்ச் சொற்பிழை திருத்தி பயிலரங்கம்
வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அறிவியலதமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்து அனைவரையும் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் பாரதஜோதி அனுமதியுடன் நடைபெற்றது. பதிவாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியர் முனைவர் தியாகராஜன் நோக்கவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, உதவி பேராசிரியர் ,தமிழ் துறை து.ரவிக்குமார் கூறியதாவது வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் போன்ற இலக்கணச் செய்திகளை அதிகமான எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.மேலும் பிற்பகலில் சேலம், பெரியார் பல்கலைக்கழகம்,பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி அவர்கள் இணையவழி எழுத்துப்பிழைத் திருத்தி, சொற்பிழைத் திருத்தி, சந்திப்பிழை திருத்தி ஆகியவற்றைத் திறன் மிகுத் திரையில்(SMART SCREEN) உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,முனைவர் பட்ட ஆய்வாளர் தமீம் அன்சாரி இணைப்புரையாற்றினார்.
நிறைவில் முனைவர் பட்ட ஆய்வாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.இதில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர்