தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ருத்ராவதி கணபதி பாளையம் பகுதிகளில் குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட . கோவிந்தராஜ். தலைமையில் மூகாம்பிகை நகர் மனோகரன் நாச்சிபாளையம் ஆனந்தகுமார். ஜல்லிப்பட்டி மோகன். ஊஞ்சுவேலம்பட்டி சண்முகவடிவேல். ஜல்லிப்பட்டி மாரிமுத்து. வடுகபாளையம் கதிர்வேல். பல்லடம் சேகர். கார்த்திக். கௌதம். நாகராஜ். பெருமாள். வெங்கடாசலம். லட்சுமணன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்து கைபேசியில் தொடர்பு கொண்டு ஒன்று கூடி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த வேலையில் ஆகியோரை . குண்டடம் போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் இருந்து (ரூ.1.43.020) மற்றும் விளையாட பயன்படுத்திய 52 சீட்டு கட்டுகள் .ஆறு இருசக்கர வாகனம். ஒரு நான்கு சக்கர வாகனம். குண்டடம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து நடப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குண்டடம் காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பல நாட்களாகவே தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்கள் நடந்த வண்ணம் இருந்த வேளையில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் சில நாட்களுக்கு முன்பு இதே போல் சிலர் சட்ட விரோதமாக நடந்து கொண்டதின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *