நன்றி, விசுவாசம் உள்ள பிராணி என்பதற்கு இலக்கணமாக இருந்துவரும் நாயை மிஞ்சிய மெய்சிலிர்க்க வைக்கும் பூனையின் எஜமான் விஸ்வாச காட்சிதான் இந்த காணொலியின் ஒரு காட்சியின் புகைப்படம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இராமபுரத்தில் குடிசை வீட்டில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்துவரும் சசிகுமார் என்பவர் தனது குழந்தையைபோன்று இரண்டு பூனைகளை அரவணைத்து வளர்த்து வருகிறார்.

இவர் தினசரி தனது பணியினை முடித்துகொண்டு வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் தூக்கினாலும் குழந்தையைபோன்று வளர்த்துவரும் பூனையுடன் தனது நேரத்தை செலவிட்டு அதற்கு உணவளித்துவிட்டு பின்னர் தான் சசிகுமார் தனது பசியை போக்கி கொள்வதை வழக்கமாக கடைப்பிடித்து வந்துள்ளார்.

தனது எஜமானான சசிகுமாருக்கு விஸ்வாசத்தை காட்டும் வகையில் அவரது இரண்டு பூனைகளும் இன்று இரவு நேரத்தில் 6 அடி நீளம்கொண்ட விஷம்கொண்ட பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் வழியாக வீட்டில் நுழைய முற்பட்டபோது அந்த இரண்டு பூனைகளும் அந்த பாம்பை மியாவ் மியாவ் என கத்தியபடி விரட்டியடித்ததோடு தனது எஜமானது குழந்தையையும் பாதுகாத்தது. பூனையின் இந்த எஜமான் விஸ்வாச போராட்டம் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒன்று.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *