இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூரில் மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா
திருவாரூர் ஆன்மீகம் ஆனந்த அமைப்பின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருவாரூர் பெரிய கோவில் சன்னதி தெருவில் கடந்த மூன்று நாட்களாக மார்கழி மாத பக்தி தமிழிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பூண்டி கலைவாணன்,தர்மபுர ஆதீனம் மற்றும் பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.