முத்தியம்பாளையத்தில் ரூ 42.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற செயலகம் அருண் நேரு எம்பி திறந்து வைத்தார்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையத்தில் ரூ 42. 65 இலட்சம் மதிப்பீட்டில்
ஊராட்சி மன்ற புதிய செயலகத்தை 02/01/2025 அன்று பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு திறந்து வைத்தார்.முத்தியம்பாளையம் ஊராட்சி மன்ற செயலகம் திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த எம்பி அருண் நேருக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார்,மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன்,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கங்காதரணி,உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார், ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ்,யூனியன் பொறியாளர் கலைராஜ்,ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், திமுக ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை,சிவ சரவணன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி நடுவலூர் செல்வகுமார், ஊராட்சி செயலர் சாமிநாதன், பொறியாளர் அணி மகேஷ்வரன், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார் மற்றும் கழக தொண்டர்கள் ஒப்பந்ததாரர்கள் மகேந்திரன், மகேஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்