புதுப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை – புலனக்குழு சார்பில் வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் அழகாகவும் பிழையின்றியும் எழுதும் போட்டி கடந்த மாதம் 31 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இதில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 47 பேர் கலந்து கொண்டனர். பிழையின்றி அழகாக எழுதிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு புலனக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் த.நளினி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இரா. பொற்செல்வி, தமிழாசிரியர்கள் தா.பிரபாகரன்,கே.சங்கீதா தமிழன்னை புலனக்குழு நிறுவுநர் அகநம்பி தி.பால சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் லிங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலரும் தமிழன்னை புலனக் குழுவின் ஆலோசகர்களுமான கீழார் ஏ.சிவா மற்றும் சதுரை அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலா 500/- பரிசு வழங்கி வாழ்த்தினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்