மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலம்–2, ல் சிஐடியூ – எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்…

தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி
மண்டலம்–2ல் சிஐடியூ – எல்.எல்.எப். சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம்–2ல் பணிபுரியும் நிரந்தர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சிஐடியூ மற்றும் எல்.எல்.எப். தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி புதனன்று வடக்கு
மண்டலம்–2ல் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களின் சரண்டர் விடுப்பு மற்றும் தேர்வு நிலை, சிறப்பு நிலை நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்க வேண்டும்.

கிராமப்பஞ்சாயத்து இணைப்புத் தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். தினக்கூலி தூய்மை பணியாளர்கள் 389 பேரை நிரந்தரம் செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய உத்தரவை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.


பொது வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.900/- மற்றும் பாதாளச்சாக்கடை, குடிநீர் பிரிவு பணியாளர்களுக்கு அரசாணை 62 (2டி)ன் படி குறைந்தபட்ச தினச்சம்பளமாக ரூ.761/- ஐ நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கான டி.பி.சி. தொகை ரூ.600/- ஐ நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.


அவர்லேண்ட் நிறுவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பயோமெட்ரிக் வருகைப் பதிவை கைவிட வேண்டும். அந்த நிறுவனத் தின் மூலம் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அரசாணை 62 (2டி)ன் படி குறைந்தபட்ச தினச்சம்பளமாக ரூ.761/- மற்றும் ரூ.900/- ஆகியவற்றை 2023 செப்டம்பர் முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.


அவர்லேண்ட் நிறுவனம் பிடித்தம் செய்துள்ள ஊழியர் சேமநிதி தொகை ரூ.70,000/- ஐ உடனடியாக செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், நிறுவன நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து மாதத்திற்கு இரண்டு முறை தொழிலாளர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உடனடியாக ஊழியர் அரசு காப்பீட்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கைகள் பலமுறை வலியுறுத்தப்பட்டும் தீர்வு காணப்படாத நிலையில், அவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சி.ஐ.டி.யூ மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி
யன், எல்.எல்.எப். துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் மாவட்ட அமைப்பாளர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் வடக்கு மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இதில் சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, செயல் தலைவர் ரவி,
எல்.எல்.எப். துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில் :
அரசாணை படி, தூய்மை மற்றும் சுகாதாரப் பிரிவு தொழிலாளர்
களுக்கு ரூ.761, ஓட்டுநர்களுக்கு ரூ.900, டிபிசி மருந்து ஊற்றும் பணியாளர்களுக்கு ரூ.600 என்ற விகிதத்தில் தினச்சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதனை திட்டமிட்டு காலம் கடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரண்டர் விடுப்பு தொகை, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பணப் பலன்கள் அரசு உத்தரவு இருந்தும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொடர் போராட்டங்கள், மண்டல அலுவலக முற்றுகை மற்றும் மாநகராட்சி அலுவலகம் நோக்கி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் எம். பாலசுப்பிரமணியம் எச்சரித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *