போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
துணை ஆணையா் சரவணக்குமாா், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மண்டலமாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு இறப்பு சான்றிதழ் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை கட்டிட அனுமதி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த பகுதிக்குட்பட்ட மண்டலக் கூட்டத்தில் இங்கு வந்து தான் மனு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது
மாநகராட்சி ஆன்லைனில் புகாா்கள் தொிவித்தாலும் அது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உங்கள் இல்லத்திற்கே வந்து அதை சாி செய்து விடுவாா்கள். பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. மாநகராட்சி பொருத்தவரை சுகாதாரம் உள்ளிட்ட நிறைய பணிகள் நடைபெற்று வருகிறது 4000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது 45 வருடமாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனது வீட்டை தாண்டிய பின்பு ஒரே பனைமரமாக இருக்கும் ஆனால் தற்போது எட்டையாபுரம் ரோடு தாண்டி குடியிருப்பு பகுதிகள் வந்து கொண்டுள்ளது அதற்கு தகுந்தாப்போல் சில வசதிகள் செய்யப்பட உள்ளது பெரிய சாலைகள் அமைக்கப்படுகிறது ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 60 அடி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது