கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள்-நலத்திட்ட பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் 1461 பயனாளிகளுக்கு ரூ. 4.01 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் -10,000 முகாம்கள் – நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்தைச் சார்ந்த பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1140 பயனாளிகளுக்கு ரூ. 1.64 கோடி மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகைக்கான ஆணைகளும்,கூட்டுறவுத் துறையின் சார்பாக 102 பயனாளிகளுக்கு ரூ. 1.39 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள், நகராட்சி நிர்வாகம்(ம) குடிநீர் வழங்கள் துறையின் சார்பாக 100 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர்வரி உள்ளிட்ட ஆணைகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பாக 50 பயனாளிகளுக்கு ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகைக்கான ஆணைகளும்,


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ. 13.68 இலட்சம் மதிப்பீட்டில் முதிர்வுத் தொகைக்கான ஆணைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 25 பயனாளிகளுக்கு ரூ.1.24 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் என மொத்தம் 1461 பயனாளிகளுக்கு ரூ.4.00 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. வழங்கினார்.


இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. விமல்ராஜ், மாநகராட்சி மேயர் வெ. கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல்,மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா,கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆர். அபிராமி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரகாசம், துணை மேயர் ப.சரவணன், மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ்.பி. கனகராஜ்,ஆர்.எஸ் ராஜா,மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், மாமன்ற உறுப்பினர் பாண்டியன், வட்டாட்சியர்கள் மோகன்ராஜ், சத்தியமூர்த்தி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *