தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் ஏ என் எம் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார். மொத்தம் 42 மாணவ மாணவிகளுக்கு தலா பன்னிரண்டாயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பிஷப் தார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 28 நபர்களுக்கும் சி எஸ் ஐ ஏ என் எம் டிரைனிங் கல்லூரியில் பயிலும் 14 மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக அரசு உயர் கல்வித் துறை சார்பாக இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இலவச மடிக்கணினி நிகழ்வு வழங்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் கிறிஸ்டி மேகலா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் இவ்விழாவில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், பிஷப் செவிலியர் கல்லூரி ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளி நிர்வாகி ஜான் வெஸ்லி, துணை பேராசிரியை ஷாலினி, நகர மன்ற உறுப்பினர் யூசப் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *