கண்டமங்கலம், பிப், 05
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே 76 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் 16 பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டது.
இதனை நேற்று திண்டிவனத்தில் இருந்து காணொளி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஒன்றிய சேர்மன் ஆர் எஸ் வாசன் புதிய பள்ளி கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி மாணவர்களுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் , ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி முருகன் துணைத் தலைவர் பத்மாவதி சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சம்பத் குமார் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.