திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில்
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், பெருந்தாரக்குடி ஊராட்சி குளிக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணம் வைப்பு இயந்திரத்தில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி 18 ஆயிரம் ரூபாய் தொகையை எந்திரத்தில் செலுத்தி அதற்குரிய ரசதியே பெற்றுக் கொண்டுள்ளார் மேலும் பணம் பெற்றுக் கொண்டதாக இயந்திரத்தில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் வங்கியை அணுகி கேட்டபோது சரியான விளக்கங்களை வங்கி நிர்வாகம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் மூன்று மாத காலங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட நபர் தனது 18 ஆயிரம் ரூபாய் தொகையை வங்கி நிர்வாகம் வழங்கிட வேண்டுமென இருவருக்கும் மேற்பட்ட முறை வங்கி கிளைகள் மனுக்கள் அழிக்கப்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேவை குறைபாட்டினை கண்டித்தும் குளிக்கரை பகுதி பொதுமக்கள் குளிக்கரையில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.