வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுச்செயலாளர்,
R. குழந்தை வேலு அவர்கள் தலைமையில் சங்க தலைமை நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர்,
01, கல்வி, வேலை வாய்ப்பு,சமூக அந்தஸ்து, பொருளாதாரத்தில் மிகவும் , பின்தங்கிய நிலையில் உள்ள சலவையாளர்களுக்கு, தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், Bc, யிலிருந்து MBC உருவாக்கியதுபோல் சலவையாளர்களுக்கு, மருத்துவர்களுக்கும் மிக மிக பின்தங்கியோர் பட்டியலை உருவாக்கி பட்டியல் இன மக்களுக்கு, அரசு மூலம் என்னென்ன சலுகைகள், கிடைக்கிறதோ,அவை அனைத்தும் சலவையாளர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்,

02, சலவை தொழிலாளர்கள் மருத்துவர்களுக்கு தனி தொகுதி சுழற்சி முறையில் உருவாக்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,சட்டமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்,
ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நியமன உறுப்பினர்களை, நியமிக்க வேண்டும்,

03, நாகரிகம் தொழில்நுட்பம் விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் குடி ஊழியம் என்ற பெயரில் வண்ணார், முடி திருத்துவோர், ஜாதியினரை வர்ணாசிரம தர்மம் என்ற பெயரால் அந்த கால சடங்குகளை தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் ஜாதியினருக்கு சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,

04, மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலங்களில் கொடுக்கும் நிவாரணம் தொகை போல், மழைக்காலங்களில் சலவை தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் மிக மிக பாதிப்படைகிறது, அப்பொழுது சலவையாளர்களுக்கும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,சிறு குறு தொழிலாளர்களுக்கு, நெசவாளர்களுக்கு, மின்சார மானியம் கொடுப்பது போல், சலவை தொழிலாளர்களுக்கும் விதிமுறைகளை தளர்த்தி, அரசு மானியம் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்,

05, திருவாரூர் நகர பகுதியில் தொழில் செய்ய ஏற்ற வகையில் இலவச மனை பட்டாவுடன், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர வேண்டும், ஏற்கனவே திருவாரூர் நகரம் நெய் விளக்கு தோப்பு பகுதியில் மிக பழமையான சலவைத் துறை மிக பழுதடைந்துள்ளது, அதை தொழில் செய்ய உகந்த அளவிற்கு அதனை புதுப்பித்து சலவை துறை அமைத்து தர வேண்டும், ஆற்றங் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்றில் துறையில்லாமல் உள்ளது, படித்துறைகள் அமைத்து தொழில் செய்ய உகந்த வகையில் அமைத்து தர வேண்டும்,மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி,வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனு வழங்கப்பட்டது,அப்போது உடன் சங்க செயல் தலைவர் S,முத்தையன்,சங்க பொருளாளர்,J, நடராஜன்,துணைச் செயலாளர்P, செல்வராஜ் துணைத்தலைவர் V, செந்தில் குமார் இணைச் செயலாளர்கள் P, முத்துக்கிருஷ்ணன்,
M. கண்ணன் நகர செயற்குழு உறுப்பினர் A, மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *