திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகள் விவசாயிகளின் நலன் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் மாநிலங்களுக்கு வரி பகிர்வை 41% மட்டுமே வழங்கியிருப்பதாகவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதது உரம் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகளுக்கு போதிய மானியம் வழங்கவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..