குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் குடிநீர் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் குடிநீர் வசதி , சுடுகாடு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பொது மக்களுக்கு செய்து தரக் கோரி பல்வேறு முறை கோரிக்கை வைக்கும் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் காலி குடங்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்குத்து கிளை செயலாளர் திருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் காலி குடங்களை தலையில் சுமந்தவாறு கலந்துகொண்டனர்

குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டனை உரையாற்றினார்

ஆர்ப்பாட்டத்தின் போது என்எல்சி இந்தியா சுரங்கப் பகுதியை ஒட்டியுள்ள கிராமம் என்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கந்தகம் கலந்திருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது எனவும்

வடக்குத்து ஊராட்சியில் நியாய விலை கடைகளை அமைக்க வேண்டும் எனவும்

அடிப்படை வசதிகளான சாலை வசதி தெரு விளக்கு வசதி உள்ளிட்டவை செய்து தர வேண்டும் தொடர் விபத்து எற்ப்படுவதால் சாலைகளில் வேகதடை அமைக்க வேண்டும்

நிரந்தர சுடுகாடு இல்லாத காரணத்தினால் இறந்தவர்களின் உடலை புதைப்பதில் சிரமம் உள்ளதால் நிரந்தர சுடுகாடு அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

மேலும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்தால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *