கொடைக்கானல்

குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராம பகுதியில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான 3000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.தினமும் சேவல், அன்னம், மயில், காளை, சிங்கம், ஆட்டு கிடா உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதி காலை திருத்தேர் ஏற்றமும், மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *