தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கூத்தாநல்லூர் கமலாபுரம்,கண்கொடுத்தவனிதம், விடயபுரம், சேந்தமங்கலம், கோமல், அடியக்கமங்கலம், மாங்குடி,மாவூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.