திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூரில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையாளர் பண்டகசாலையில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இயற்கையை வணங்கும் திருவிழாவாக தை வருட பிறப்பையொட்டி தமிழர்களால் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை ஒட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழாக்கள் நடத்துவதை ஆண்டுதோறும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருவிழாவான பொங்கல் பண்டிகையை திருவாரூரில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஊழியர்கள் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடினர்.
அதை ஒட்டி பெண் ஊழியர்கள் ஒரே மாதிரியான புடவைகள் அணிந்தும், ஆண்கள் வேஷ்டி சட்டைகள் அணிந்து வந்தும் வீட்டில் பொங்கல் வைப்பது போல பொங்கல் பானை வைத்து சமத்துவ பொங்கல் வைத்ததோடு, பொங்கல் பொங்கி வந்த நேரத்தில் பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சமத்துவ பொங்கல் வைத்தனர்.
இந்த நிகழ்வில் மேலாண்மை இயக்குனர் அறபளி பொது மேலாளர் காளிதாஸ் மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.