நாகப்பட்டினம் ஆராய்ச்சி நிறுவனம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் & இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை
அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் GALILEOVASAN ஆராய்ச்சி நிறுவனத்துடன் இன்று (10/01/25) 5 வருடங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம் GALILEOVASAN ஆராய்ச்சி நிறுவனம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி துறை சார்ந்த பயிற்சிகள், வேலை வாய்ப்பு தகவல்கள் மற்றும் தொழிற்சாலை பயிற்சிப்பட்டறை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. மேலும் GALILEOVASAN நிறுவனம் 09/1/25 மற்றும் 10/01/25 ஆகிய இரண்டு நாட்கள் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறையை நடத்தியது. இறுதியாக கல்லூரி வளாகத்தில் GALILEOVASAN ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.