திருப்பூர் செய்தியாளர் சரவணகுமார்
9342431984
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. கனகவல்லி தாயார் மற்றும் பூமாதேவி சமேத ஸ்ரீ வீரராகவ பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனமும் அலங்கார பூஜை நடைபெற்றது, தொடர்ந்து கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சரவணகுமார்
9342431984