கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் அட்லஸ் கலையரங்கதில் நடைபெற்ற விழாவில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 286 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.’உலகம் உங்கள் கையில்’ என்னும் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கானஅறிவிப்பை வெளியிட்டு அதற்கான பணிகளை முதலமைச்சருடைய திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் இதுவரை 5205 மாணவ,மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்ற 218 மாணவ,மாணவியர்களுக்கும் மற்றும் பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரில் பயிலும் 68 மாணாக்கர்களுக்கும் என மொத்தம் 286 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.