பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் 2025–2026 ஆம் ஆண்டுக்கான பொதுநிதி திட்டம், வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.10 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி பணிகளை இன்று (05.02.2026 – வியாழக்கிழமை) சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தும், நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்தும் சிறப்பித்தார்.

இதில் வாணதிரையன்பட்டினம் முருகன் கோவில் அருகில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல், 10 HP மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் அமைக்கும் பணியும், அதே ஊராட்சியில் நாயுடு தெருவில் ரூ.17.51 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

இடையார் மேலத்தெருவில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் மற்றும் 10 HP மோட்டார் அமைக்கும் பணியும், துளாரங்குறிச்சி ஊராட்சியின் சூரியமணல் வடக்கு தெருவில் ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக்கும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது.

கல்லாத்தூர் ஊராட்சியில், காமாட்சியம்மன் கோவில் தெருவில் ரூ.10.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் மற்றும் 10 HP மோட்டார் அமைக்கும் பணியும், வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கல்லாத்தூர் வடக்கு மையத்தில் ரூ.17.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது.

தண்டலை ஊராட்சியில், வடவீக்கம் வடக்குத் தெருவில் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியும், சலுப்பை ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் ரூ.9.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாற்று போர்வெல் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், படநிலை ஊராட்சியில் FBDP–2024–2025 திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையமும், காட்டகரம் ஊராட்சியின் கைலாசபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) அன்பரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வட்டார ஊராட்சி), ஆ.பிரபாகரன் (கிராம ஊராட்சி), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) சுசீலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், ஜெயங்கொண்டம் ஒன்றிய பொறுப்பாளர்கள் தன.சேகர் (மேற்கு), இரா.மணிமாறன் (மத்தியம்), நா.கணேசன் (கிழக்கு) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கழக தோழர்கள் அருள்தாஸ், பிரான்சிஸ் , ராஜாராமன், ரவிக்குமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *