செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது என்ன.!

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், நவம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலி நாட்டிற்கு பணியாற்ற சென்ற 5 பேர் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த புதியவன், பொண்ணு துரை, பேச்சி முத்து, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜ், தளபதி சுரேஷ் ஆகியோர் மின் இணைப்பு பொறுத்த கூடிய நிறுவனத்தில் பணியாற்ற சென்றுள்ளார்கள். அவர்கள் அங்குள்ள ஆயுதகுலுக்களால் கடத்தப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆகவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மத்திய, மாநில அரசுகள் அங்குள்ள தூதரகம் மூலம் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தேர்தலை சந்திக்க புதிய தமிழகம் கட்சி கடந்த இரண்டு வருடமாக கிராமம் தோறும் சுற்றுபயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறோம். மாநாடு நடத்தியுள்ளோம், புதிய தமிழகம் கட்சியை பொறுத்தவரை தேர்தலுக்கு எந்த நேரத்திலும் ஆயத்தமாக இருக்கிறது. எந்த கட்சி என்று தற்போது சொல்ல முடியாது.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஊழலற்ற ஆட்சி, கனிமவள கொள்ளை இல்லாத ஆட்சி வரவேண்டும், மது கொள்ளையால் சமூகம் சீரழிந்துள்ளது, அரசு வேலைக்கு பணம் பெற்றுக் கொண்டு வேலை கொடுக்கும் அவல நிலைக்கு எதிராக, பல சமூக சிந்தனையுடன் கூடிய நல்ல அரசு அமைய வேண்டும். அதை நோக்கி நாங்கள் கூட்டணி அமைப்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறோம். கால அவகாசம் உள்ளதால் வலுவான கூட்டணி வெற்றி கூட்டணி அமைய வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றோம்..

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது வெறும் இயந்திரத்தனமான மாற்றமாக இருக்கக் கூடாது. மாற்றத்தில் பொருள் இருக்க வேண்டும், அர்த்தம் இருக்க வேண்டும், மக்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுக்கக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும். அதுதான் எங்களது கொள்கை அந்தக் கொள்கை அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கருத்து கணிப்பு திமுகவிற்கு சாதகமாக உள்ளதே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? நிறைய எழுதி கொள்ளலாம். அவர்களிடம் பவர் இருக்கிறது. இன்னும் 3 மாத காலம் உள்ளது. மக்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தமிழக மக்கள் முடிவு எடுப்பார்கள்.

தமிழகம் முழுவதும் பட்ஜெட்-டில் ஒன்றும் இல்லை என்று முட்டை படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இது குறித்த கேள்விக்கு? 100 நாள் வேலைக்கு 125 நாட்களாக உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நிலமற்றவர்கள் 40 முதல் 50% பேர் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதாரம் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்பது போல் தோன்றுகிறது.

பேட்டியின் போது,, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் டாக்டர் சியாம் உடன் இருந்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *