கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள
சேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில்,சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்
ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.சேரன் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் மூலம் வருகை தந்த விருந்தினர்களுக்கு சால்வை
அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்,நாண்டி(naandi) அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. சேரன் கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ஸ்நேகா ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில்,15 நிறுவனங்களிலிருந்து 15 மனிதவள (HR) மேலாளர்கள் கலந்து கொண்டு,மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு தேர்வு செயல்முறைகளை மேற்கொண்டனர்.சேரன் இயன்முறை மருத்துவக் கல்வி” முதல்வர் டாக்டர் ஏ.அருணா முகாமை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினார்.

நாண்டி அறக்கட்டளையின் நிரல் மேலாளர் திரு.ரோஹித் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உலகில் தேவையான திறன்கள்,நேர்காணல் அணுகுமுறைகள் மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.இம்முமுகாமில் சேரன் கல்விக் குழுமத்தின் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.சேரன் கல்லூரி பார்மசி முதல்வர் டாக்டர் தேவிகா,சேரன் கல்லூரி நர்சிங் முதல்வர் டாக்டர் மீனா குமாரி,SMS கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்ரமணி,Cheran College for Women முதல்வர் டாக்டர் பாக்யலட்சுமி,ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறிவியல்,உடற்பயிற்சி மருத்துவம்,செவிலியியல்,மருந்தியல் மற்றும் பொறியியல்
துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு செயல்முறைகளில் கலந்து கொண்டனர்.இம்முகாம் மூலம் பல மாணவர்கள் பணிநியமன ஆணைகள் பெற்றதுடன்,நிறுவனத்தேர்வு நடைமுறைகள் குறித்த மதிப்புமிக்க அனுபவத்தையும் பெற்றனர்.மாணவர்களின் எதிர்கால தொழில்முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இத்தகைய முயற்சிகள்,Cheran கல்விக் குழுமத்தின் கல்வி மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.இம்முகாமில் 1000-கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *