திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது இந்த பள்ளிவாசல் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு நாளை திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில்
பொதக்குடி சுற்றி உள்ள ஆய்க்குடி , அகரபொதக்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேள தாளங்கள் முழங்க 150 தட்டுகளில் சீர்வரிசையாக பூ பழங்கள் , இனிப்பு வகைகள் வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருட்களுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் முக்கிய வீதிகளின் வழியாக நடந்து சென்று தாய்மாமன் சீர் போல் கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்வரிசை எடுத்து வந்த இந்து பொதுமக்களை இஸ்லாமியர்கள் கட்டி அணைத்து கூல்ரிங்ஸ் கொடுத்து வரவேற்று பள்ளிவாசலில் வைத்து மரியாதை செய்தனர்.
பொதக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேள தாளங்கள் முழங்க 150 தட்டுகளில் சீர்வரிசை கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது