இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பு அலுவகத்தில் நடைபெற்றது,இதில் கடந்த ஜன,30அன்று நகராட்சிஅலுவகத்தில், நடைபெற்ற அவசர நகர் மன்ற கூட்டத்தில், நகராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தற்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்
கீழக்கரை நகரின் மக்களின் அடிப்படை தேவையான ஆரம்ப சுகாதார நிலையம், மீன் மார்க்கெட், புதிய பேருந்து நிலையம், அறிவு சார் நூலகம், மேல் நீர் தேக்க தொட்டி, பாதாள சாக்கடை, அறிவுசார் மையக் கட்டிடம் ஆகியபணிகள் நடைபெறாமல் இருக்கும் பட்சத்தில் அவசர அவசரமாக நகர்மன்ற கூட்டத்தை கூட்டி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு என்ன தேவை உள்ளது இது பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை காட்டுகிறதுஇதனை கீழக்கரைபொதுமக்கள் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான திட்டங்களுக்கு அரசிடம் நிதி தேவை உள்ளது என்றுகோரிக்கை வைக்காமல் அந்தத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது ,
அவசர கதியில் உறுதி தன்மையுடன் பல வருடங்களாக இருக்கின்ற நகராட்சி கட்டிடத்தை, தற்போது இடிப்பதற்கும் புதிய கட்டிடம் கட்டுவதற்கும் என்ன காரணம் இருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதற்கு நகராட்சி நிர்வாகம் பதில் கூறாமல் மௌனம் சாதித்து வருவது சந்தேகத்தைஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனரமேலும் கீழக்கரைபொதுமக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரின் வழிகாட்டுதலின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகிகள் கூறினார்.