தென்காசி மாவட்டம்
செங்கோட்டை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா.
செங்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. விழாவிற்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமழ் இனியன் தலைமை தாங்கினார்.
செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், சுபாஷ்சந்திரபோஸ், வர்த்தக சங்க தலைவா் தலைவரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான எஸ்எம்.ரஹீம் நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.
சப்-இன்ஸ்பெக்டர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து காவல் நிலைய வளாகத்தில் படையிட்டு பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிலைய தலைமைக்காவலர், சிறப்பு காவல் கண்காணிப்பாளா், காவலர்கள் பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவா் வேல்சாமி அரசு வழக்கறிஞா் மாரிக்குட்டி பாஜக நகரத்தலைவா் வேம்புராஜ், தஞ்சாவூர் பள்ளிவாசல் ஜமாத் தலைவா் முகைதீன்பிச்சை(எ) முதலாளி கிறிஸ்தவ போதகர், எஸ்ஆர்எம். அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா் ஜீவா, சமூக ஆர்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்