ராஜபாளையம் ஏ. கே. டி, சத்திரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான விழாவில் ஏ. கே. டி, கல்வி நிறுவனருமான
ராவ்பகதூர் ஏ. கே. டி, தர்மராஜா,சக்கனி அம்மாள்
திரு உருவ படம் திறப்புவிழா நடைபெற்றது.
இதில் மேனேஜிங் டிரஸ்டி ரஜித்குமார் கோபாலகிருஷ்ணராஜா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல் சுவாதிஸ்வரன், ஆடிட்டர் சுரேஷ் ஆகியோர் ஏ. கே. டி, தர்மராஜா சக்கனி அம்மாள் ஆகியோரின் திரு உருவ படத்தை திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக ரோகிணி அம்மாள், சுரேஷ்குமார், பத்மபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணமராஜு,நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ராமபத்ரன் ராஜு மற்றும்
நிஷாத் கார்த்திக்குத்துவிளக்கு ஏற்றினார். இதில் கல்வி நிறுவனங்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.