கோவையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல் பட்டு வருகிறது..

சுமார் ஒரு இலட்சம் துவங்கி ஒரு கோடி ரூபாய் வரை சீட்டு சேர்ப்பு குழுக்களை நடத்தி வரும் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் குழுமத்தின் ஆறாவது கிளையாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் துவங்கப்பட்டது..

இதற்கான துவக்க விழா ஸ்ரீ துளசி சிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தயாளன் தலைமையில் நடைபெற்றது..

இதில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர் விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ துளசி சிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும்,கோயம்புத்தூர் மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் தலைவருமான தயாளன் பேசுகையில்,கடந்த 36 வருடங்களாக வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் எங்களது ஸ்ரீ துளசி சிட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறிய அவர்,எங்களது நிறுவனத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் இருப்பதாக தெரிவித்தார்..

குறிப்பாக அரசு விதிமுறைகளின் படி ஜி.எஸ்.டி.உள்ளிட்ட வரிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாக கூறிய அவர்,எங்களது நிறுவனத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் சேமிப்பு சீட்டுகளில் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடைந்து வருவதாக தெரிவித்தார்..

விழாவில் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் உஷா நந்தினி,அர்ஜூன்,வழக்கறிஞர் தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *