திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு பொது நிர்வாக மண்டல துணைச் செயலாளர் தமிழ் முத்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தார் அதில் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டு முடிந்த கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு பற்றிய அறிக்கையை முன்னிட்டு, கல்லூரி பேராசிரியருக்கான பணிக்காக அரசின் அறிவிப்பினை தொடர்ந்து பலர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வுக்கான விண்ணப்பத்தில் 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்ப எண் என்னவென்றும், இணை இயக்குனர் தரும் சான்று தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கேட்கப்பட்டுள்ளது.

இவ் விண்ணப்பம் பற்றிய தகவல்கள் பின்னாளில் தேவைப்படும் என்று அப்போது எந்தவித அரசானையோ, செய்தியோ வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு பேராசிரியருக்கும் தகுதியின் அடிப்படையில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் ஒப்புதல் எண்ணை ( QUALIFICATION APPROVAL ) வழங்குகின்றனர்.

அந்த எண்ணினை வைத்து பார்த்தாலே எப்பொழுது கல்லூரியில் பணி அமர்த்தபட்டார், எத்தனை ஆண்டு பணி செய்துள்ளார், தகுதி தேர்வு (நீட் ) தேர்வு வெற்றி பெற்றது, முனைவர் பட்டம் பெற்றது, தேர்வு தாள் திருத்தும் பணி, மொத்த ஆண்டுகள் உள்ளிட்ட தகவல்கள் கிடைத்து விடுகின்றன. என்று இது குறித்து கோட்டாசியுடன் விளக்கி மனு கொடுக்கப்பட்டது இந்த மனுக்கொடுக்கும் நிகழ்ச்சியில் விடுதலை செய்த கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *