தூத்துக்குடி மாநகர் மாசு படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் .ஆணையர் பிரியங்கா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரில் மையப்பகுதியில் உள்ள பக்கீல் ஓடை ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ளது தொடர்ந்து தூர்வாரப்பட்டாலும் பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகள் .கேரிபை பக்கீல் ஓடையில் கொட்டப்படுவதால் பல நேரங்களில் மழை நீர் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது அடைப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் மண்டல அலுவலகத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பதினாறு நபர்களுக்கு மேயர் ஜெகன் அதற்கான ஆணையை வழங்கினார் நிகழ்ச்சியில் ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

சொத்து வரி .புதிய தீர்வை. குடிநீர் இணைப்பு உடனுக்குடன். சாலை வசதிகள் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படுகிறது மக்கள் முற்றிலும் கேரி பை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் பக்கீல் ஓடையில் கேரிபை பொதுமக்கள் போட்டு வருகின்றனர் நீங்கள் பக்கில் ஓடையில் கேரிபை போட வேண்டாம் அதற்காக புதியதாக ஒரு திட்டம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பக்கீல் ஓடை ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ளது பக்கீல் ஓடை முக்கிய இடங்களில் எல்லாம் இந்த இடத்தில் கேரி பை குப்பை போட வேண்டாம் இந்தப் பகுதியில் என்னை அசுத்தம் செய்ய வேண்டாம் நான் முத்து பேசுகிறேன். அதுபோல நான் முத்து மாநகரம் பேசுகிறேன் உள்ளிட்ட வசனங்கள் கூடிய போர்டு வைக்கப்படுகிறது அதன் மூலம் பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் அதனால் கேரிபை மாநகரத்தில் முற்றிலும் தடுக்கப்படலாம் பக்கீல் ஓடையில் போடுவதை முற்றிலும் நிறுத்த முடியும் என்று மேயர் ஜெகன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *