தேனி மாவட்டம் கம்பம் நகரில் புதியதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் வணிக வளாகம் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் போன்றவைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்


இதன்படி கம்பம் பார்க் திடலில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ரூபாய் 178.00 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் ரூபாய் 175.00 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ் நிலையம்
கம்பம் வாரச் சந்தை அருகே ரூபாய் 265.00 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் போன்றவைகளை பொது மக்கள் பயன் பாட்டிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் து. உமாசங்கர் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் வழக்கறிஞர் துரை நெப்போலியன் உள்பட நகராட்சி அலுவலர்கள் நகர் மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *