கோவை மாவட்டம் காலை சுமார் 6 மணி அளவில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டாட்டா காபி நிறுவனத்திற்கு உட்பட்ட வில்லோனி டாப் டிவிஷன் பகுதியில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்களுக்கான சுமார் 12 அடி ஆழம் உள்ள குடிநீர் தொட்டியில் இன்று காலை சுமார் 6 மணியளவில் சுமார் இரண்டிலிருந்து மூன்று வயதுடைய ஆண் யானை குட்டி ஒன்று அதன் தாய் மற்றும் கூட்டத்தோடு அப்பகுதியில் வந்த போது தவறி குடிநீர் தொட்டியில் விழுந்து தத்தளித்து உள்ளது
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் அதனைத்தொடர்ந்து வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பணியாளர்கள் விரைந்து சென்று குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டு சம்பவ பகுதிக்கு ஜேசிபி இயந்திரம், மருத்துவ உதவிகள், மற்றும் யானைக்குத் தேவையான பழங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டு சுமார் 6 மணி நேர முயற்சிக்கு பின்னர் யானை குட்டியை நலமுடன் மீட்டுள்ளனர்
அதனைத் தொடர்ந்து இந்த மீட்பு பணி நடைபெறும் பொழுது சம்பவ இடத்திலேயே இருந்த தாய் யானை தனது குட்டி யானை மீட்கபட்டதை உணர்ந்து மகிழ்ச்சியோடு குட்டியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று தனது கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது இச்சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு குட்டி யானையை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்