பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242 f மாவட்டம் சார்பில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி லைலா சுப்பிரமணியன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த திருமணத்தை குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் மாவட்ட தலைவர்
லயன் கலைவாணி சிவராமன் தலைமை ஏற்றி நடத்தி வைத்தார்.

இதில், 3 ஜோடிகளுக்கு தலா இரண்டு கிராமில் தங்க தாலி, , பீரோ, உள்ளிட்ட, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என மணமக்களை வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் லயன்ஸ் அமைச்சரவை பொறுப்பாளர்கள் மற்றும் லயன்ஸ் சங்கங்கங்களுன் தலைவர் பொருளாளர் செயலாளர் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *