திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது.
இந்த பள்ளிவாசல் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு இன்று சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் அஜீஸ் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன்.. நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசிய போது தமிழை படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என பேசினார்.
அவருக்கு தமிழ் மீது இவ்வளவு வெறுப்பு விரோதம் ஏன் வந்தது விளங்கவில்லை.
ஒன்றிய அரசு தமிழ் மொழியை பிரபலப்படுத்தி அதை வளர்ப்பதற்கான முயற்சியை செய்வாய் எனில் இந்தியாவினுடைய ஒற்றுமை மேலும் மேலும் ஓங்கும் அது புரியாமல் ஹிந்தி சமஸ்கிருதம் என பேசி வருகிறார்கள். இதற்கான பதிலை மாநிலங்கவையில் கமல்ஹாசன் வேகமாக பேசினார்.
இறைவனால் உருவாக்கப்பட்ட மொழி போற்றப்பட்ட மொழி , இறைவனை துதிக்கும் மொழி இறைவனை பாடுவதற்கும் போற்றுவதற்கும் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் விட தமிழ் மொழி தான் சிறந்த மொழி என்று திருமூலர் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட தமிழ் மொழியை கொச்சையாக தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்பது புரியாத னத்தில் உடைய வெளிப்பாடு தமிழ் புரியாமல் தமிழ் மக்களையும் புரியாமல் தமிழ் வரலாற்று தெரியாமல் இலக்கியத்தையும் தெரியாமல் இலக்கணத்தையும் தெரியாமல் பல பேர் பேசிக்கொண்டு வருகிறார்கள் பொறுப்புள்ள அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுவது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை குறித்தான கேட்ட கேள்விக்கு தமிழகத்திற்கு நிறைய காக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.
காக்கைகள் படை எடுத்து வந்ததனால் அதையெல்லாம் குயில்களாக மாறிவிடுமா மயிலாக மாறிடுமா படையெடுத்து வர தான் செய்வார்கள் தேர்தல் வரப்போகிறது தேர்தல் பிரச்சாரத்திற்காக தலைவர்கள் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வருவதனால் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்திடும் என்று சொன்னால் தாமரை வளராது.
கடலில் போய் தாமரை மலராது , தாமரை பூக்க வேண்டும் என்றால் தடாகம் வேண்டும் தமிழ்நாடு தாமரை பூ பூக்கக்கூடிய தடாகம் கிடையாது தாமரை தமிழகத்தில் பூக்க முடியாது தமிழ்நாடு ஒரு பெருங்கடல் தமிழ்நாட்டு கடலிலே தாமரை வரவே வராது வாய்ப்பே கிடையாது என தெரிவித்தார்