மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
மணலி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர். மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம். மண்டல அலுவளர் தேவேந்திரன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் உங்கள் கையில் மாணவ மாணவிகள் உயர் கல்விக்கும் வேலைவாய்ப்பு மாணவர்கள் முன்னேற்றம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் அடுத்த கட்ட நகர்விற்காக தமிழக முதல்வர் திட்டமான மடி கணினி வழங்கும் திட்டத்தில் கிழ் மணலி சி டி சி எல் நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ மாணவிகள் 142 பெர்களுக்கு மடிகணிகளை வழங்கினர்.
முன்னதாக திமுக அரசின் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்தும் மடிக்கணினி பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவுரை வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.