கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாவட்ட கல்விக்குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாருமான பொறியாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ,திமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கையர்கன்னி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பேசுகையில் கடந்த தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதனை கடுமையாக விமர்சித்தார் ஆனால் தற்பொழுது தளபதியார் அறிவித்தபடி அனைத்து மகளிர்க்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மேலும் மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் மகளிருக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்
மேலும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசுகையில்
என் டி எ கூட்டணியில் இணைந்துள்ள அதிமுக என் டி ஏ கூட்டணி அல்ல அது நேஷனல் டிசாஸ்டர் கூட்டணி தேசியத்தை அழிக்க வந்த கூட்டணி எனவும் எடப்பாடி பழனிச்சாமி 420 என டிடிவி தினகரனை விமர்சித்தவர் ஆனால் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துள்ளது பொதுமக்களை முட்டாளாக்கும் செயல் எனவும் லேகியம் விற்கும் நபரை போல் பஸ்சை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றி வருகிறார்
கொடைநாடு கொலை வழக்கில் நம்பர் ஒன் கூட்டாளி எடப்பாடி பழனிச்சாமி என
அதிமுக கலாய்த்து பேசினார்
மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி போன்று ஹிந்தியில் பேசி லியோனி
5000 வடைகளை சுட முடியும் என்றால் அது பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்
கடந்த 14 வருடங்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்றார் ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்ற வில்லை என பேசினார்
மேலும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து அவர் பேசுகையில் பஸ்ஸை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நடிகர் விஜய் தன்னை டாப் எஞ்சின் என கூறி வருகிறார் ஆனால் அது டாப் எஞ்சின் அல்ல டப்பா இஞ்சின் என விமர்சித்தார்
நிகழ்வில் குறிஞ்சிப்பாடி பேரூர் கழக செயலாளர் கேவிபி ஜெய்சங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் நாராயணசாமி காசிராஜன் சுப்பிரமணியன் வடலூர் நகர செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே பி ஆர் பாலமுருகன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் பொதுக்குழு உறுப்பினர் எஸ் பி கண்ணன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் குறிஞ்சிப்பாடி தெற்கு அவைத்தலைவர் ராமமூர்த்தி குறிஞ்சிப்பாடி வடக்கு அவைத் தலைவர் எஸ் ஆர் கோபு கடலூர் மேற்கு அவை தலைவர் சக்கரபாணி வடலூர் அவைத்தலைவர் சுப்புராயலு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார்
திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.